தேசிய எரிபொருள் அட்டையை பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Kiruththikan
எரிபொருள் ஒதுக்கீடு
தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என பதிவு செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி (SMS) அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தேசிய எரிபொருள் அட்டையை பெறுவதற்கு பதிவு செய்ய முடியும்.
21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம்
தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே 21ம் திகதி முதல் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின் சக்தி ஏரி சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
