உயர்தர பெறுபேறு வெளியான மாணவர்களுக்கான அறிவித்தல்
விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி
இந்த வருடம் 42519 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2021-2022ஆம் கல்வியாண்டில் மருத்துவப் பீடங்களுக்கு 2035 மாணவர்களும் பொறியியல் பீடங்களுக்கு 2238 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களை செப்ரெம்பர் 23ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக அனுப்புமாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கம் அறிவிப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அரச தகவல் நிலையத்தின் 1919 என்ற இலக்கத்தினூடாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 0112695301 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் அதுபற்றித் தெரிவிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

