அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மறுக்கும் அநுர தரப்பு
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதனை செய்ய முடியாமல் போனதால் தற்போது எமது கட்சியினர் பேசும் காணொளிகளை தவறாக பேசுபொருளாக்குகின்றனர்.
கருப்பு பணம் செலவிடப்படாத ஒரு ஜனாதிபதி தேர்தலை கடந்த முறை காணக்கூடியதாக இருந்தது.
தேசிய மக்கள் ஆட்சிக்கு வரும் போது கடவூச்சீட்டு பிரச்சினை காணப்பட்டது, தற்போது அதனை நிவர்த்தி செய்து கடவூச்சீட்டு வழங்கப்படுகின்றது.
அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கையெழுத்திட்ட இலங்கை நாணயதாள்களை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது. அதற்கான தேவை தற்போது இல்லை.” என்றார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள பொது தேர்தல்: பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |