தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள பொது தேர்தல்: பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு

Sri Lankan Tamils Velan Swamigal General Election 2024
By Shadhu Shanker Nov 12, 2024 06:55 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சிறிலங்கா (Sri lanka) தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருந்த போதும் இத்தேர்தலானது தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அரசியல் தரப்புகளுக்கு அரசாங்கத்தின் இறுதி அறிவிப்பு

முன்னாள் அரசியல் தரப்புகளுக்கு அரசாங்கத்தின் இறுதி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல்

குறித்த அறிக்கையில், " எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள பொது தேர்தல்: பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு | Sri Lanka Elections P2P Movement S Stand

சிறிலங்கா தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருந்த போதும் இத்தேர்தலானது தமிழர்தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு எவ்வித தீர்வையும் தராத போதும் எமது பிரதிநிதித்துவத்தையாவது உறுதிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலையிலே உள்ளோம்.

அதேபோலவே தமிழ் மக்கள் எமது அரசியல் நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. இன்று சிறிலங்காவின் பேரினவாதக்கட்சிகள் தாமே தமிழ் மக்களின் மீட்பர்கள் போலவும், தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை எதுவுமே இல்லை என்பது போல ஒரு மாயத்தோற்றத்தினை எம்மக்களிடையே, குறிப்பாக இளைய சமுதாயத்தை குறிவைத்தே விதைக்கின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல்! மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்

அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல்! மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்

தமிழர் தாயகம்

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) என்னும் முகமூடியுடன் வலம் வரும் ஜே.வி.பி எனும் சிங்கள இனவாத கட்சி, தமிழ் மக்களின் விடுதலை அவாவினை இலங்கை தேசியத்தில் கரைத்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதில் மும்முரமாக உள்ளது.

தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள பொது தேர்தல்: பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு | Sri Lanka Elections P2P Movement S Stand

தமிழர் தாயகத்தை நீதிமன்றத்தினூடாக இருகூறாக பிரிப்பதில் ஆணிவேராக செயற்பட்ட இவர்கள், தமிழர் தேசத்திற்கும் சிறிலங்கா தேசத்திற்கும் இடையில் சர்வதேச அனுசரணையுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையை முறிவடைய செய்வதில் காத்திரமான பங்கு வகித்தவர்கள்.

குறிப்பாக சுனாமி பேரழிவின் பின் உருவாக்கப்பட்ட சுனாமி கட்டமைப்பை (Post Tsunami Operational Management Structure (PTOMS)) செயலிழக்க செய்வதில் பெரும் பங்கு வகித்தவர்கள். தென்னிலங்கையில் சிங்கள இனவாதத்தை தூண்டி, தமிழர் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு ஊக்கிகளாக இயங்கியவர்கள். முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை இவர்கள் கையிலும் உள்ளது.

எமது இனத்தின் மீதான இனவழிப்பை இலகுவாக மறந்து, மறைத்து தமிழருக்கு இனப்பிரச்சனையே இல்லை என்று எமக்கே பாடம் எடுக்கின்றனர். இவர்களும் சிங்கள பேரினவாதிகளின் இன்னொரு வடிவமே. இடதுசாரிகளாக தம்மை வெளிப்படுத்தும் இவர்கள் ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள என்றுமே தயாராக இல்லை.

பிரித்தானியா - பிரான்ஸ் நாடுகளை அச்சுறுத்தியுள்ள ரஷ்யாவின் அதி நவீனப் போர்க்கப்பல்

பிரித்தானியா - பிரான்ஸ் நாடுகளை அச்சுறுத்தியுள்ள ரஷ்யாவின் அதி நவீனப் போர்க்கப்பல்

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை

இவர்களை எமது தாயகத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டிய தலையாய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. எமது மண்ணிலேயே பிறந்து வளர்ந்தும், அற்ப சலுகைகளுக்காக எமதினத்தின் இருப்பையே சிங்கள பேரினவாதத்திடம் தாரைவார்க்கும் துரோகிகளும் எமது மண்ணில் எம்மிடையே உள்ளார்கள். உரிமைகளை விலைபேசி சலுகைகளை பெற்றவர்கள், இன்று அந்த சலுகைகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே உள்ளார்கள்.

தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள பொது தேர்தல்: பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு | Sri Lanka Elections P2P Movement S Stand

இவர்கள் மீண்டு எழுந்து வரமுடியாத மாபெரும் தோல்வியை வழங்கும் நேரம் இப்போது கனிந்துள்ளது. அதேபோல் தமிழ் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு, தமிழ் மக்களின் இருப்பையும் ஒற்றுமையையும் சிதைப்பதில் மும்முரமாய் உள்ள சிலரும் வாக்கு வேண்டி உங்களிடம் வருவார்கள். இந்த கயவர்களுக்கு மீளமுடியாத தோல்வியை கொடுக்க வேண்டிய பாரிய கடமையும் உங்கள் அனைவருக்கும் உண்டு.

சிறிலங்காவின் எந்த தேர்தல்களோ அல்லது ஆட்சி பொறிமுறைகளோ தமிழ் மக்களின் தேசிய கேள்விக்கு எந்த பதிலையும் தராது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து கொண்டு, ஆயினும் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை, தமிழ் மக்களின் பலத்தினை வெளிப்படுத்தும் விதமாக உங்களின் வாக்குகளை பயன்படுத்துங்கள். தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும்.

அதன் ஒரு பொறிமுறையாக, தமிழ் மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடைய முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். நிரந்தரமான தமிழர்தேசம் இந்த பூமிப்பந்தில் உதிக்க தொடர்ந்தும் பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                   
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வத்தளை

05 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, சென்னை, India

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

07 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025