அலிபாபாவும் 40 திருடர்களும் பங்கேற்ற நுகேகொடை பேரணி!
நுகேகொடையில் நேற்று (21.11.2025) நடைபெற்ற கூட்டமானது அலிபாபாவும் 40 திருடர்களும் பங்கேற்ற கூட்டமாகும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நேற்று (21.11.2025) நடைபெற்ற ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளின் பேரணி தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க சிலர் பகல் கனவு கண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகல் கனவு
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிலர் பகல் கனவு காண்பதால் தான் டிசம்பர் ஜனாதிபதி போன்ற கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நாட்டின் பழைய அரசியல் கலாசாரம் நுகேகொடை பேரணியில் வெளிப்பட்டது.
தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேலுவைப் போல தற்போது எதிர்க்கட்சி மாறிவிட்டது.
திருடர்களின் இளவரசரே நாமல் ராஜபக்ச எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |