அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை!
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலங்கை மத்திய வங்கி 2024 ஒக்டோபர் முதல் 2025 ஜூன் மாதம் வரை மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் (ரூ. 1.2 டிரில்லியன்) பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மீறி நாணயத்தாள்களை அச்சிடுவது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு சவால்
அத்தோடு, நாணய அச்சிடுதல், குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் உள்நாட்டுக் கடன் ஆகியவை இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு சவாலாக அமையக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின், 2024 ஒக்டோபரில் ரூ. 58.70 பில்லியன், நவம்பரில் ரூ. 78.30 பில்லியன், டிசம்பரில் ரூ. 234.80 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஜனவரியில் ரூ. 117.40 பில்லியன், பிப்ரவரியில் ரூ. 104.70 பில்லியன், மார்சில் ரூ. 233.90 பில்லியன், ஏப்ரலில் ரூ. 154.20 பில்லியன், மே மாதத்தில் ரூ. 33.60 பில்லியன், ஜூன் மாதத்தில் ரூ. 210.3 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.
IMF விதி மீறல்
குறிப்பாக, IMF வழிகாட்டுதல்களுக்கு மாறாக 2025 ஜூன் மாதத்தில் மட்டுமே ரூ. 210.3 பில்லியன் (10.4% விரிவாக்கம்) அச்சிடப்பட்டுள்ளதுடன், 2025 மார்ச் மாதத்தில் ரூ. 233.90 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது, இது ஒரு மாதத்தில் அச்சிடப்பட்ட அதிகபட்சமாகும் தொகை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் நாட்டின் கடன் மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய அரசு பதவியேற்றபோது ரூ. 17,595.05 பில்லியன் இருந்த உள்நாட்டு கடன், 2025 ஏப்ரல் மாதத்துக்குள் ரூ. 18,629.86 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 1,034.81 பில்லியன் அதிகரித்துள்ளது.
இதனிடையே, புதிய அரசாங்க காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் ரூ. 28,574.65 பில்லியனிலிருந்து ரூ. 29,480.39 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 905.74 பில்லியன் அதிகரித்துள்ளது.
இதன்படி, வெளிநாட்டு கடன் குறைந்திருந்தாலும், உள்நாட்டு பிணைமுறி பத்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக கடன் எடுப்பதே இதற்குக் காரணமாகும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
