அநுர கட்சியில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள்...சஜித் தரப்பு பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியிலில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது, “அரிசி கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறிய ஆலை உரிமையாளர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.
தற்கொலை குண்டுதாரிகள்
அத்தோடு, ரத்ன அரிசி ஆலைக்கு சொந்தக்காரரான குறித்த நபர் இலங்கை வங்கியொன்றில் 3.5 பில்லியன் ரூபா கடனாக பெற்றுள்ளதாகவும் அமைச்சர் வசந்த குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து, அமைச்சர் வசந்தவின் கருத்துக்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலிலும் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்களே உள்ளனர் என தெரிவித்தார்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |