கொழும்பிற்கு எதிர்ப்பு - தேசிய மக்கள் சக்தி மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்
தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள்(NPP) மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு எதிர்ப்பு´ என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது.
கண்ணீர் புகை தாக்குதல்
அங்கு காயமடைந்த சுமார் 20ற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை காவல்துறையினரும் மருதானை காவல்துறையினரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில் நேற்று (26) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
No leader or party has ever been right all the time, it’s why we need to tolerate dissenting voices within a democracy. Today #NPP protestors were tear gassed and many sustained many serious injuries. The Government’s message is loud and clear to the public, SHUT UP AND SIT DOWN.
— Sajith Premadasa (@sajithpremadasa) February 26, 2023
அதன்படி, போராட்டத்தை கைவிடுமாறு முன் வந்த போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், அவர்கள் வீதியை மறித்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.



