ராஜபக்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - வலுக்கும் ஆதரவு
Anura Kumara Dissanayaka
SL Protest
By Vanan
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறுகிய கால வேலைத்திட்டத்துடன் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என தமது கட்சி கருதுவதாகவும், அதற்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி