அநுர தலைமையிலான மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் (06.09.2026) ஆரம்பமாகவுள்ளது.
"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் ஆரம்பமாகவுள்ளன.

மேலும், பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி எதிர்கால பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21