எதிரிகள் ஆட்சியிலிருந்து தப்பி ஓடும் வரை பேரணிகள் தொடரும் : கம்மன்பில சூளுரை
Udaya Gammanpila
NPP Government
Nugegoda Rally
By Sumithiran
நுகேகொட பேரணி ஒரு பெரிய தீயாக மாறியுள்ளது என்றும், அடுத்த பேரணியை தங்கள் மாவட்டத்தில் நடத்த நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும் பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
"கடந்த 21 ஆம் திகதி நுகேகொடவில் நாங்கள் தொடங்கிய இந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின் நெருப்பு ஒரு பெரிய தீயாக மாறி, இந்த தாய்நாட்டின் எதிரிகள் அரச ஆட்சியிலிருந்து தப்பி ஓடும் வரை நாடு முழுவதும் பரவும் என்று இன்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
ஜனவரியில் இரண்டாவது பேரணி
அடுத்த பேரணியை தங்கள் மாவட்டத்தில், தங்கள் மாகாணத்தில் நடத்த நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜனவரியில் இரண்டாவது பேரணியை நடத்த நாங்கள் நம்புகிறோம்."என்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி