இலங்கையை விட்டு வெளியேற துடிக்கும் இலட்சக்கணக்கானோர் -வெளிவந்த தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
அதேநேரம் மேலும் சிலர் தமது உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக படகுகளில் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்புக்காக செல்லும் இலட்சக்கணக்கானோர்
இவ்வாறான நிலையில் கடந்த எட்டு மாதங்களில் 140,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருடம் மேலும் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர தெரிவித்தார்.
பெருமளவானவர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கே வேலைவாய்ப்பு தேடி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இலங்கையின் வேலைப்படையினர் அந்நிய தேசத்தில் தமது உழைப்பை செலவிடும் அதேவேளை இலங்கையில் வேலையின்மை வீதம் அதிகரித்து செல்வதையும் இந்த புலம்பெயர்வு எடுத்துகாட்டுவதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.