நாமல் ராஜபக்சவிற்கு போசாக்கு குறைபாடு - சக எம்.பி கவலை
நாமலுக்கு போசாக்கு இல்லை
தன்னைப் போலவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் மாறிவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இலங்கையில் மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஓரளவிற்கு இருந்ததாகவும் ஆனால் ஊடகங்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். '
முட்டை,பால்,இறைச்சி விலைகள் அதிகரிப்பு
நாட்டில் இன்று முட்டை விலை அதிகரித்துள்ளது, பால் விலை அதிகரித்துள்ளது, மீன், இறைச்சி விலையும் உச்சம் தொட்டுள்ளது. மக்களால் அவற்றை வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நான் மீன் கூட சாப்பிடுவதில்லை. அதனால் இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாகவும் மீனைக் கூட உண்ணாத நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல பொலன்னறுவையில் உள்ள பளுதூக்கும் வீரர் ஒருவர் கூட இப்போது மரக்கறிகளை மத்திரமே சாப்பிடுகிறார். அவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது' என்றார்.
