வடக்கு மற்றும் கிழக்கின் அரசியல் அபிவிருத்தி! சம்பந்தனை சந்தித்த உயர்ஸ்தானிகர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன் சந்தித்துள்ளார்.
இதன் போது, வடக்கு மற்றும் கிழக்கின் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரைாயடப்பட்டதாக மைக்கேல் ஆப்பிள்டன் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் மைக்கேல் ஆப்பிள்டன் ஓய்வு பெறவுள்ளார்.
சம்பந்தனுடன் கலந்துரையாடல்
இந்த நிலையில், அவர் சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளை அண்மை நாட்களில் சந்தித்து முக்கிய பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவர் இன்று சந்தித்துள்ளார்.
இதன் போது, இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கு இடையிலான சமூக ஒற்றுமை மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பில் சம்பந்தனுடன் கலந்துரையாடியதாக மைக்கேல் ஆப்பிள்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சரின் மூத்த வெளியுறவு ஆலோசகராக மைக்கேல் ஆப்பிள்டன் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |