இந்தியாவா... நியூசிலாந்தா... அரையிறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்..!
2023ற்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் அரையிறுதிபோட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது, இன்று(15)மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக கிண்ண தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
அரையிறுதிப் போட்டி
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இதனை தொடர்ந்து நாளை(16)கொல்கத்தாவில்,இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
அரையிறுதி போட்டிகளில் வெற்றிப்பெற்ற அணிகள் எதிர்வரும்(19) திகதி இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
காலநிலை காரணமாக
அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளன்று காலநிலை காரணமாக போட்டிகள் நடைபெறாவிட்டால், மாற்றுநாள்(ரிசர்வ் டே) முறையில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
2019ல் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப்போட்டியில் மோதிய போது இந்தியா அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.