புதிய சிக்கலில் பொறிஸ் ஜோன்சன் - வெளியாகிய அறிக்கை..!
பிரித்தானியாவில் கொரோனா நோய்த் தொற்று இருந்தபோது அரசாங்கம் பொதுமுடக்க நிலை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்திய போது அப்போது பிரதமராக இருந்த பொறிஸ் ஜோன்சன் அவற்றை மீறியதுடன் இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய குற்றத்தை இன்று பகிரங்கமான சிறப்புரிமைக்குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை பகிரங்கமானதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கபட்டு பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
பிரித்தானியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று காலை பகிரங்கமானவுடன் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஒரு பொய்யர் எனவும் சட்டத்தை மீறிய அரசியல்வாதி எனவும் எதிர்கட்சிகள் தமது கண்டனத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
தவறாக வழிநடத்தியமை
அந்த வகையில் லிப் டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர் சர் எட் டேவி, தனது கண்டனத்துடன் பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் பொறிஸ் ஜோன்சனை மையப்படுத்தி சுழலும் பார்ட்டிகேற் எனப்படும் இந்த முறைகேடு பிரித்தானியாவில் கொரோனா நோய்த்தொற்று இருந்தபோது அரசாங்கம் பொதுமுடக்க நிலை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்தியபோது இடம்பெற்றிருந்தது
நாட்டுக்குரிய சட்டங்களை இயற்றிய அப்போதைய பிரதமரான பொறிஸ் ஜோன்சன் தனது அரசாங்கம் இயற்றிய கொரோனா தடுப்புசட்ட விதிகளை மீறியதுடன் இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தை அவர் வேண்டுமென்றே பலமுறை தவறாக வழிநடத்தியமையும் இந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியதால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகாமல் விட்டால், அவரை 90 நாட்களுக்கு இடைநீக்கி அதன் மூலமாக ஒரு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் தொழிற்கட்சி நாடளுமன்ற உறுப்பி ஹாரியட் ஹர்மன் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த விசாணை குழுவின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது
எனினும் கடந்த வெள்ளியன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோன்சன் அறிவித்திருந்தார். அத்துடன் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்குரிய அனுமதி ஜோன்சனுக்கு வழங்கப்படக்கூடாது எனவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்க்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கையை ஒரு கேவலமான அறிக்கை என சாடியுள்ள ஜோன்சன் இன்றைய நாள் நாடாளுமன்னற உறுப்பினர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் ஒரு பயங்கரமான நாள் என்றும் வர்ணித்துள்ளார்
