அநுர அரசாங்கத்தால் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடரும் நெருக்கடி
இதுவரையில் உத்தியோகபூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் (Ampara) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், உத்தியோகபூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.
அரசு அலுவலகங்களை கையகப்படுத்துவதற்கான விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |