அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம
Ampara
By Vanan
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை சர்வமத போதகர்களின் ஆசீர்வாத உரையுடன் கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இவர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை அரசாங்க அதிபராக இருந்து ஓய்வுபெற்றுச்சென்ற ஜே.எம்.ஏ.டக்ளஸின் இடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக கடமையேற்ற சிந்தக்க அபேவிக்ரமவின் இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் அடங்கலாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி