அரசியல் பின்னணியில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகள்: அநுர அரசு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியல் பின்னணியில் வெளிநாட்டு சேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் நியமனங்கள்
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “வெளிநாட்டுச் சேவைகளில் தொடர்பே இல்லாவர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 15 பேரை மீள அழைத்துள்ளோம், உண்மையாகவே அரசியல் நியமனங்கள் அனைவருக்கும் பொருந்தாது.
முன்னர் இராணுவத்தில் இருந்து வேறு பொறுப்புகளை வகித்த இவ்வாறான பதவிகளுக்கு சிலரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, அரசியல்வாதிகளும் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, நாடளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகள் தூதுவர் பதவிக்கு கீழே உள்ள மற்ற பதவிகளுக்கு நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம்
அவர்களை மீள அழைத்துள்ளோம்.அந்த நியமனங்கள் செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.அது எதிர்காலத்தில் நடக்காது.
வெளிநாட்டு சேவையில் பணிபுரிபவர்களின் சிறப்புத் தேவைகளின் அடிப்படையில் சிறப்புத் திறன் கொண்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சில இடங்களில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சர்வதேச தேவைகளுடன் சிலரை நியமிக்க வேண்டியுள்ளது.நாங்கள் அதை நியமிக்கிறோம்.
இந்த நிலையில் தவறான முறையில் நியமிக்கப்பட்டுள்ள அனைவரையும் டிசம்பர் 01 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வருமாறு அறிவித்துள்ளோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |