இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!
இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான காவல்துறை பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |