கட்டுநாயக்கவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!
சட்டவிரோத புறாக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்று இரவு (25.07.2026) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவாவைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அரியவகை புறாக்களுடன் 2 இலங்கையர் கைது
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புறாக்கள் சட்டவிரோதமானது என்றும் அவை 431,400 ரூபாய் மதிப்புள்ள 64 அரிய வகை புறாக்கள் என்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'பசுமை வழித்தடம்' வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோதே சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் துபாய் வழியாக இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு முன்பு இத்தாலியில் பறவைகளை வாங்கியதாகக் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நாட்டின் விலங்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புறாக்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து, ஒரு பயணிக்கு 4 இலட்சம் ரூபாயும், மற்றொருவருக்கு 1 இலட்சம் ரூபாயும் என அபராதமாக மொத்தம் 5 இலட்சம் ரூபாய் விதிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட புறாக்கள் இத்தாலிக்கு திருப்பி அனுப்ப சுங்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |