ஈரான் போர் முடிவுக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்: ட்ரம்ப் தகவல்
புதிய இணைப்பு
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வந்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் சரணடைந்தவுடன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் கச்சா எண்ணெய் விலை “அதலபாதாளத்திற்கு” சரியும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக ஏற்கனவே அதிகளவான எண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும், அண்மையில் அந்த நீரிணை ஊடாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எண்ணெய் வெளியேற்றப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரான் முன்வைத்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி, WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம் உயர்ந்து 93.47 அமெரிக்க டொலர் அளவில் பதிவாகியுள்ளது.
அதேவேளை, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.23 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 105 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை
இதனிடையே, முர்பான் (Murban) கச்சா எண்ணெய் விலை 3.81 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 113.1 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் மற்றும் அதனை ட்ரம்ப் நிராகரித்துள்ளமை காரணமாக, எண்ணெய் விநியோகம் தொடர்பான நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |