வெடித்துச் சிதறிய எண்ணெய் தாங்கி! குழந்தைகள், கர்ப்பிணித் தாய் உள்ளடங்கலாக 20 பேர் பலி
நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தின் ஓரேயில் எண்ணெய் தாங்கி வெடித்ததன் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த எண்ணெய்த் தாங்கி வெடித்து விபத்து நேற்று (24) ஏற்பட்டுள்ளது.
லாகோஸ்-பெனின் விரைவுச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்த வேளையில், குறித்த விபத்தினால் தடித்த கறுப்புப் புகையுடன் பாரிய தீ உண்டானது.
இந்தத் தீ முழு இடத்திற்கும் பரவிய நிலையில் தீயணைப்பு வாகனங்கள் பல அரசாங்கத்தின் உத்தரவின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
தொலைபேசியினால் தீ விபத்து
சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவரின் தொலைபேசியினால் ஏற்பட்ட தீப்பொறியால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தின் பொது 03 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணித் தாய் உள்ளடங்கலாக 20 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
BREAKING: FIRE EXPLOSION AT ORE, ONDO, STATE! OUR THOUGHTS AND PRAYERS ARE WITH THEM ??? pic.twitter.com/j65zJHwURI
— GTDrumz (@DrumzGt) July 24, 2023
இந்த எண்ணெய்த் தாங்கி வெடித்துச் சிதறிய விபத்து காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.