ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - அமெரிக்கா கடும் விசனம்
ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மற்றொரு தாக்குதல்
இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்துள்ளது.

அமெரிக்க மத்திய மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பனாமா கொடியுடன் பயணித்த 'எல் கையா' (EI Gaia) என்ற குறிப்பிட்ட எண்ணெய் தாங்கி கப்பல், கடந்த மாதம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்கனவே செயலிழந்திருந்தது.
அத்துடன், கடந்த வார இறுதியில் ஓமன் கடலோரப் பகுதியில் மீண்டும் ஈரான் நடத்திய மற்றொரு தாக்குதலுக்கு உள்ளானது என்றும் தெரிவித்துள்ளது.
"நீர்வழியில் வர்த்தகக் கப்பல்களைத் தடுக்க முயற்சிக்கும் ஐ.ஆர்.ஜி.சி-யின் இந்த பொய்யான கூற்று, அவர்களின் பொய்கள் மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு மற்றுமொரு உதாரணமாகும்," என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளது.
தேடும் பணிகள்
இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

கப்பலில் இருந்த 14 இந்தியப் பணியாளர்களில் 13 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 11 மணி நேரம் முன்