கணித பாடத்திற்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த கதி: பாம்பு கொத்தியதால் பறிபோனது பார்வை
தற்போது நடைபெற்றுவரும் சாதாரண தர பரீட்சையின் கணித பாடத்திற்குத் தோற்றுவதற்கு தயாரான குளியாப்பிட்டி மத்திய கல்லூரியின் மாணவன் ஒருவன் பாம்பு கடித்ததால் பார்வை இழந்துள்ளதாக குளியாப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
பரீட்சை காலத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைத் தடை செய்யும் விதிமுறைகளை அரசாங்கம் விதித்துள்ள நிலையில், கணித பாடத்தின் பயிற்சி வினாத்தாள் குறித்து கலந்துரையாட ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பும் போது மாணவனை பாம்பு கொத்தியதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குளியாப்பிட்டி போதனா மருத்துவமனை
குளியாப்பிட்டி போதனா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், நோயாளியின் அறிகுறிகள் அவரை பாம்பு கடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் கூறினார்.

சில நேரங்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் காரணமாக எதிர்காலத்தில் மாணவனின் பார்வை மீட்டெடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், தேர்வு காலத்தில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |