இலங்கையின் இறுதி நம்பிக்கையும் இல்லாமல் போனது
டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.
தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார்.
இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை கார்ல்ஸன் பெற்றிருந்தார்.
எனினும், மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.
இந்த நிகழ்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்று இருந்தது. இதில் இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து போயுள்ளது.
இதேவேளை, வெறும் கையுடன் திரும்புவதற்காக 6 மில்லியன் யூரோ (சுமார் 1.4 பில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்புள்ள குதிரையுடன் ஒலிம்பிக்கிற்கு வரவில்லை” என்று மதில்தா கார்ல்சன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.