திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி...! மற்றுமொருவர் படுகாயம்
திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17-09-2026) குறித்து விபத்து இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம் வயது (33) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி நபரே உயிரிழந்துள்ளார்.
அத்தோடு அவரோடு மோட்டார் சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |