கல்முனையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
அம்பாறை(Ampara) - கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பெரிய நீலாவணை 02 செல்லத்துரை வீதி பகுதியை சேர்ந்த 2 பெண் பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய பூசாரி சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதுடன் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சடலமானது நேற்று(23) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |