முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Mullaitivu
Law and Order
By Shalini Balachandran
முல்லைத்தீவு (Mullaitivu) கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
துப்பாக்கிச்சூடு
அத்தோடு, வயலில் அறுவடை செய்த நெல்லை வீதி காவலில் பாதுகாத்தவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்