தென்னிலங்கைப் பகுதியில் தொடருந்தில் சிக்கி ஒருவர் பலி!
Police
Katunayake
SriLanka
Seeduwa
Kurana
Seeduwa Police
By Chanakyan
சீதுவை - தலுபொத வீதி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் தொடருந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கட்டுநாயக்க, குரண பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சீதுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்