புகையிரதம் மோதி ஒருவர் பலி
Srilanka
train
killed
Colombo
collision
By MKkamshan
களுத்துறை வடக்கு பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ராஜேந்திரம் சனாதனன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, களுத்துறை கல்லூரிக்கு முன்பாக சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்