அமெரிக்காவில் காணாமல் போன முட்டைகள்
அமெரிக்கா(United States) - பென்சில்வேனியாவில் ஒரு லட்சம் முட்டைகள் களவாடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால் அங்கு முட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு டசன் பெரிய முட்டைகள் 7.08 அமெரிக்க டொலராக உள்ள நிலையில், இது 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட 7 மடங்கு அதிகம் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
களவாடப்பட்ட முட்டைகள்
இந்த நிலையில், பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்தில் இருந்து ஒரு லட்சம் முட்டைகளை கும்பல் ஒன்று திருடிச்சென்றுள்ளது.

இதன்போது, களவாடப்பட்ட முட்டைகளின் மதிப்பு 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என கூறப்படும் நிலையில் முட்டை களவாடப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்