யாழில் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி - தொடரும் காவல்துறை விசாரணை
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Dharu
யாழ் கொடிகாமம் மிருசுவில் வடக்கு பகுதியில் துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை

உந்துருளியில் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த போது உந்துருளி கவிழ்ந்து அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துச் சுடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி