கோர விபத்தில் 23 வயதுடைய பெண் பலி: சாரதிகள் கைது
மிரிகான பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று மிரிகான காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவல வீதியில் இடம்பெற்றுள்ளது.
பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முயன்ற பெண்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மிரிகான காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவல வீதியில், நாவல சந்தியிலிருந்து மிரிகானை நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் பெண் ஒருவர் கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பின்னால் வந்த கெப் ரக வாகனமொன்று குறித்த ஜீப் வண்டியின் பின்புறத்தில் மோதியுள்ளது. இம்மோதலின் அழுத்தத்தினால் ஜீப் வண்டி முன்னோக்கி நகர்ந்து வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய ஜீப் மற்றும் கப் ரக வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |