ஷிரந்தியை காப்பாற்ற சிங்கபூரில் இருந்து மருத்துவ ஆவணம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிங்கப்பூர் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனையின் அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிணை வழங்கப்பட வாய்ப்பு
இந்நிலையில், சிங்கப்பூரில் அவர் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கைகளும் தற்போது இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த அறிக்கைகளில் அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, ஷிராந்தி ராஜபக்சவுக்கு திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என குடும்பத் தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்படுகிறது.
அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வைத்தியசாலைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டு வருவதாகவும், அவர் பாதுகாப்பின் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதா, எப்போது மேற்கொள்வது, எந்த முறையில், எங்கு மேற்கொள்வது என்பன தொடர்பில் மருத்துவர்கள் பின்னர் தீர்மானிப்பார்கள் என குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தற்போது கிடைத்துள்ள மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக ராஜபக்ச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |