யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
Jaffna
Jaffna Teaching Hospital
Accident
By Kajinthan
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இன்று கார் ஒன்றும் ஜேசிபி ஒன்றும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் சாரதி படுகாயம்
இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜேசிபியின் சாரதி சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி