நாட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
குருநாகல் - மதுராகொட அந்தபொல பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் ரிதிகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை
அதன்போது, 51 வயதான தொடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, உயிரிழந்தவர் சில காலமாக துப்பாக்கிகளை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி வந்தவர் எனவும், அவரால் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்றே இவ்வாறு வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி