அமைச்சராக நியமிக்கப்படவுள்ள மொட்டு கட்சி உறுப்பினர்: பின்னணியில் இருக்கும் மர்மம்
SLPP
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Dilakshan
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, பொதுஜன பெரமுனவைப்(SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சு பதவி
மேலும், 2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் இவர், இதற்கு முன்னர் பல அரசுகளில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார் என்றும் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சராக நியமிக்கப்படவுள்ள நபருக்கு எந்த அமைச்சு பதவி வழங்கப்படவிருக்கிறது என்பது தொடர்பில் எந்த தகவல்கள் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்