சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டம் : திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்து ஐ.நா
சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளுடன் தொடர்புடைய தரத்துக்கு ஏற்ப இந்த சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சட்டமூலம்
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் அரசியல்வாதிகள், குடிசார் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
#SriLanka: The new Online Safety Act will have far reaching negative implications for human rights, incl. freedom of expression.
— UN Human Rights (@UNHumanRights) February 1, 2024
We urge the Govt. to consider amending the law to address concerns of civil society & industry groups & ensure it complies w/ human rights obligations
இந்த நிலையில், தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகமும் இந்த சட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
எதிர்மறையான தாக்கங்கள்
இந்த சட்டம் மனித உரிமைகள் தொடர்பில் எதிர்மறையான தாக்கங்களை கொண்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குடிசார் மற்றும் தொழில் சமூகத்தினருக்கு ஏற்ற வகையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |