நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் எவரும் கைதாகவில்லை : நிஹால் தல்தூவ தகவல்
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம், அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இந்த சட்டத்தின் கீழ் கைதானதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார், இந்த சட்டத்தில் கைதான முதல் நபர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவினர் எவரையும் இதுவரையில் கைது செய்யவில்லை என நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |