சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்
சாரதி அனுமதிப்பத்திரம் பெற வரும் நபர்களுக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணையவழி முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரம்
சாரதி அனுமதிப்பத்திரம் பெற வரும் நபர்களுக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக முறைப்பாடுகள் வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிபிட்டுள்ளார்.
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல்களை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும், இதனால் கைரேகை தவிர, வேரஹெரவிற்குச் செல்லாமல் செயல்முறையை முடிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த புதிய முறைமை ஒரு மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

