விமானத்திற்குள் ஏறிய தாய் மற்றும் மகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
இளம்பெண் ஒருவரும் அவரது தாயும், செஷல்ஸ் தீவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்காக விமானம் ஏறிய போது அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதன்போது, குறித்த விமானத்தில் பயணிகளாக இவர்கள் இருவர் மட்டுமே பயணிகளாக காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 25 ஆம் திகதி தாயும் Kimmy Chedel அவரின் மகளாகிய Zoe Doyle உம் செஷல்ஸ் தீவிலிருந்து சுவிட்சர்லாந்து செல்வதற்காகவிமானம் ஏறியுள்ளனர்.
ஆச்சரியம்
அப்போது, அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் விமானத்தில் பயணிகளாக இல்லாததை கண்டு ஆச்சரியமடைந்துள்ளதோடு, பயணத்தை சந்தோசமாக மேற்கொண்டுள்ளனர்.
எனினும், அவர்களை தவிர முதல் வகுப்பில் நான்கு பேர் இருந்தாகவும் ஆனால் அவர்கள் இந்த தாயும் மகளும் பயணித்த எக்கானமி வகுப்பில் பயணிக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது.
சந்தோசமான பயணம்
பயணத்தின் போது, விமான பணிப்பெண்களுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு ஆடியும் பாடியும் காணொளிகளை எடுத்துக் கொண்டு சந்தோசமாக பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், விமான பணிப்பெண்கள் தங்களுக்கு விமானத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை சுற்றிக் காட்டியதாக Zoe Doyle தெரிவித்துள்ளார்.