இத்தாலியில் தொழில் வாய்ப்பு - இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்!
Sri Lanka
Italy
By Kalaimathy
இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பில் சிறிலங்கா வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, கோரப்படவுள்ளன.
இலங்கையர்களுக்கு வாய்ப்பு
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களுக்காக 87,702 விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளுக்கே வேலையாட்கள் தேவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்