அமெரிக்காவில் சாட்ஜிபிடியால் பலியான 16 வயது சிறுவன்
அமெரிக்காவில் (United States) தங்கள் மகனுக்கு உயிர்மாய்த்துகொள்ள உதவியதாக, ஓபன்ஏஐ நிறுவனம் மீது பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த சிறுவனின் தொலைபேசியில் அவரது சாட்ஜிபிடி உரையாடல்களை பெற்றோர் பார்வையிட்டுள்ளனர்.
பெற்றோர் வழக்கு
இதில், தவறான முடிவெடுத்து உயிரிழப்பதற்கான வழிமுறைகளை சிறுவன் சாட்ஜிபிடி மூலம் தேடியுள்ளதை பெற்றோர் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து தங்கள் மகன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பதற்கு உதவியதாக, ஓபன்ஏஐ நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், வழக்கை எதிர்கொண்டுள்ள ஓபன்ஏஐ நிறுவனம், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
சுய-தீங்கு
இது தொடர்பாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளதாவது, “மக்களுக்கு மிகவும் தேவைப்படும் போது அவர்களுக்கு உதவுதல் என்ற தலைப்பில், பயனர்கள் சுய-தீங்கு போன்ற முக்கியமான பிரச்சனைகள் பற்றி பேசும்போது சாட்ஜிபிடி-ஐ மிகவும் பொறுப்பானதாக மாற்றுவதற்கு எங்களது நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
மக்களை உதவியை நோக்கி வழிநடத்த வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட உரையாடல்களின் போது அதன் பாதுகாப்புகள் பலவீனமடையக்கூடும்.
சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் பதில்களை உருவாக்கும் என்பதை ஒப்புக்கொள்கின்றோம்.
பயனர்கள் தவாறான முடிவெடுப்பதை பற்றிப் பேசும்போது ஏற்படும் உரையாடல்களைத் தணிக்க, அதன் சமீபத்திய ஜிபிடி-5 மாடலுக்கான புதிய அம்சங்களை உருவாக்கி வருகின்றோம்.
நெருக்கடி நிலை
ஒரு நெருக்கடி நிலையை அடைவதற்கு முன், சான்றளிக்கப்பட்ட சிகிச்சையாளர்களுடன் மக்களை நேரடியாக இணைப்பதற்கான வழிகளையும் ஆய்வு செய்து வருகின்றோம்.
சாட்ஜிபிடி மூலம் பயனர்கள் அணுகக்கூடிய உரிமம் பெற்ற நிபுணர்களின் வலையமைப்பு என்பது விவாதத்தில் உள்ள மற்றொரு யோசனையாகும்.
டீனேஜர்களுக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாட்பாட் ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, பெற்றோர் கட்டுப்பாடுகளை அனுமதிக்க தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
பாதிக்கப்படக்கூடிய பயனர்களை குடும்பத்தினருடனோ அல்லது நெருங்கிய நண்பர்களுடனோ இணைக்கக்கூடிய அம்சங்களையும் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

