உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றப் போவது வைத்தியர் அர்ச்சுனாவா?
ஐ.பீ.சி தமிழ் சமூகவலைத் தளம் ஒன்றில் (IBC Tamil News- YouTube Channel), உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
‘வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றப்போகும் தரப்பு எது? இதுதான் கேள்வி.
கருத்துக்கணிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்த சுமார் 1,500 பேர்களில், 54 வீதமானவர்கள் வைத்தியர் அர்ச்சுனாவே அதிக உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றப்போவதாக கணிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
34 சதவீதமானோர் தேசிய மக்கள் சக்தியைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
7 சதவீதமானவர்கள் தமிழரசுக் கட்சியும், 4 சதவீதமானவர்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெறும் என்று வாக்களித்திருந்தார்கள்.
எமது கருத்துக்கணிப்பில் வெறும் ஒரு மணி நேரத்தில் வெளியான முடிவுகளை வைத்து மாத்திரம் இதுதான் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களின் கருத்தாக இருக்கின்றது என்று நாம் பார்த்துவிடமுடியாது.
ஆனாலும், ஒரு ஆச்சரியமான ஆரம்பம் என்கின்ற வகையில், இந்தக் கருத்துக்கணிப்பை செய்தியாகப் பதிவிடுகின்றோம்.
சுமோ வந்த வேலையை கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டார் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகின்றது.
7 வீதத்தை ‘0’ ஆக்காமல் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறமாட்டார் என்பதும் தெரிகின்றது.



நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 8 மணி நேரம் முன்
