தலைவர் பிரபாகரனின் உண்மை முகம்: மனம் திறக்கும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் (காணொளி)
ஒரு விடுதலைப் போராட்டத்தின் தலைமை என்பது ஒரு கட்டமைப்பை வழிநடத்துபவர் என்பதை தாண்டி இயக்கத்திற்கும் நாட்டிற்கும் தேவையான அம்சங்களையும் உந்துதல்களையும் வழங்குவது மிக முக்கியம்.
இவ்வாறான விடயங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பல மடங்கு உத்வேகத்துடன் செயற்பட்டதாக முன்னாள் போராளிகள் தமது அனுபவங்களில் இருந்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக போராட்டங்களில் ஏற்பட்ட பின்வாங்கல்களின் போது யாருமே எண்ணமுடியாத துல்லிய முடிவுகளை தலைவர் எடுத்ததாகவும் ஒவ்வொரு போராளியின் விடயங்களிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதாகவும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு போராளியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான உந்துதல்களை வழங்கி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் தந்திரோபாயத்தை தலைவர் இயல்பிலேயே கொண்டதாக தலைவருடன் நீண்ட காலம் பயணித்த முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செயற்பட்ட தன்நிகரில்லா தலைவனின் புகழையும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றும் செயற்பாடாகவே போலித் போலித் துவாரகா விடயம் அரங்கேறி வருகின்றது.
இந்த போலித்துவாரகாவின் பின்னணி என்ன? இதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் விளைவு என்ன? என்பது பற்றி விரிவாக வருகிறது உண்மையின் தரிசனம்.......