ரணில் தொடர்பில் மொட்டு தரப்பின் பெரும்பான்மையான நிலைப்பாடு என்ன தெரியுமா..!
இன்னும் 5 வருடங்களுக்கு நாட்டை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்து சிறி லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையினர் மத்தியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்வைத்தால், அவர் ரணில் விக்ரமசிங்கவை விட திறமையானவராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
பொதுஜன பெரமுன வேட்பாளரை முன்னிறுத்துவதாக கூறியுள்ளது, ஆனால் அது யார் என்பதை இன்னும் கூறவில்லை. ஒருவேளை அந்த நபர் ரணில் விக்ரமசிங்கவாக கூட இருக்கலாம். கவலைப்பட வேண்டாம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
ரணிலை விட திறமையானவராக
ரணில் விக்ரமசிங்கவிடம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டை ஒப்படைப்பதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர்.
எனவே, சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் தேர்தலில் தனி வேட்பாளரை முன்வைத்தால், அந்த நபர் ரணிலை விட திறமையானவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |