சபையில் ஒன்று திரளும் எதிரணிகள்: அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களில் அனைத்து முடிவுகளையும் கூட்டாக எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் அனைத்து சட்டமூலங்கள் குறித்தும் கூட்டு கலந்துரையாடல்கள் மூலம் முடிவுகளை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய மத்தும பண்டார, எதிர்க்கட்சியில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் ஒன்றாகச் செயல்பட்டாலும், தேவைப்படும்போது சுயாதீனமாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் விவகாரங்கள்
எனினும், நாடாளுமன்றத்திற்கு வெளியே இணைந்து செயல்பட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அத்தகைய முடிவை எடுக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஒன்றை காண முடியாத தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் விவகாரங்களை கூட்டாக எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் சுயாதீனமான கருத்துக்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

