தமிழக முன்னாள் முதலமைச்சருக்கும் கொரோனா
COVID-19
Tamil nadu
O. Panneerselvam
By Sumithiran
ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மு.க .ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று
இதேவேளை தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
