அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு
Law and Order
Ramanathan Archchuna
Arrest
By Dharu
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு இடம்பெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடியாணை
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

எனினும் வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து நீதவான் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்